This brochure is to help you get ready for a bladder control check up. A bladder control check up includes some questions and a physical check by a doctor or trained health professional. The check up will help find any bladder control problems you have and their causes. The check up may also help to plan the best way to manage these problems. A bladder check up is painless. |
இந்த துண்டுப்பிரசுரம் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டினைச் பரிசீலிப்பதற்கு ஆட்களைத் தயார்படுத்துவதற்கு உதவியளிப்பதற்காகும். ஒரு வைத்தியரால் அல்லது பயிற்றப்பட்ட ஒரு சுகாதார சேவகரால் சில கேள்விகளையும் மற்றும் ஒரு உடற்பரிசோதனையையும் உள்ளடக்கியதாக இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டுப் பரிசோதனை இருக்கும். இந்த மருத்துவச் சோதனை உங்களுக்கிருக்கும் ஏதாவது மூத்திரப்பைக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிய உதவியாக இருக்கும். அத்துடன், இந்தப் பிரச்சினைகளை திட்டமிட்டு மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்க அது உதவலாம். சிறுநீர்ப்பையைச் சரிபார்த்தல் வலியை ஏற்படுத்தாது |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
What are your choices?Every person has a right to a private and personal check up. Your needs and wishes should be respected. People also have a right to say ‘no’ to the check up or to any other care. Choices you have may include:
|
உங்கள் விருப்பத்தெரிவுகள் என்ன?அந்தரங்கமாகவும், தனிப்பட்டமுறையிலும் சரிபார்த்தலுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. உங்கள் தேவைகளும், விருப்பங்களும் மதிக்கப்படவேண்டும். சரிபார்த்தலும், ஏனைய கவனிப்பும் ‘தேவையில்லை’ என்று சொல்லவும் மக்களுக்கு உரிமையுண்டு. உங்கள் விருப்பத் தேர்வுகளுக்குள் பின்வருவன அடங்கும்:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
What do you need to do before the check up?You may be asked to keep a bladder diary. You need to keep the diary for at least 3 days. It keeps track of how your bladder works through the day. The bladder diary may look like this:
The bladder diary keeps track of:
|
மருத்துவச்சோதனைக்கு முன்னர் நீங்கள் செய்யவேண்டியது என்ன?சிறுநீர்ப்பைத் தினக்குறிப்பு ஒன்றினைப் தினமும் பதிவுசெய்யும்படி நீங்கள் கேட்கப்படலாம். சரிபார்த்தலுக்குமுன் ஆகக்குறைந்தது 3 நாட்களாவது நீங்கள் தினக்குறிப்புப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். பகல் பொழுதில் உங்கள் சிறுநீர்ப்பை எவ்வாறு செயற்படுகிறது என்பதை அது சரியாகக் காட்டும். இதைப்போன்ற ஒன்றாகத்தான் உங்கள் தினக்குறிப்பு இருக்கும்:
சிறு நீர்ப்பை தினக்குறிப்பு தெரிவிக்கும் விடயங்களானவை:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
How do I measure the amount of urine passed? Put a container (like an ice cream container) in the toilet. Now sit on the toilet and relax with your feet on the floor. Pass urine into the container. Then tip the urine into a jug to measure it. Men may want to stand and pass urine directly into a measuring jug. How do I measure urgency? This chart shows how to use a number to describe the urge you felt.
|
வெளியேற்றப்பட்ட சிறுநீரை நான் எவ்வாறு அளவீடு செய்வது? கழிப்பறையில் ஒரு டப்பாவை (ஐஸ்கிரீம் பெட்டி போன்ற ஒன்று) வைக்கவும். இப்பொழுது கால்களைத் தளர்ச்சியாக நிலத்தில் பதித்தவண்ணம் கழிப்பறையில் உட்காரவும். அந்தப் பெட்டியினுள் சிறுநீரைக் கழிக்கவும். அதனை அளவிடுவதற்காக, ஜாடியினுள் சிறுநீரைப் பாய்ச்சவும். ஆண்கள் நேரடியாக நின்றவண்ணம் அளவுகள் குறிப்பிடப்பட்ட ஜாடியினுள் சிறுநீரை விடவும். எனது அவசர உணர்வை அளவிடுவது எப்படி? நீங்கள் அனுபவித்த அவசிய உணர்வை விபரிக்கும் இலக்கத்தை எவ்வாறு பிரயோகிப்பதென இந்த அட்டவணை காட்டுகிறது:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
How do I measure leaking using a Pad Weight Test? This test helps to work out how much urine you leak over a few days. To do this test you will need some accurate scales for weighing. You do this test by:
This will show how much you have leaked because each gram equals one ml. Like this:
|
துவாய் நிறை சோதனை (Pad Weight Test) யைப் பாவித்து சொட்டுகின்ற சிறுநீரை அளப்பது எவ்வாறு? கடந்த ஒரு சில நாட்களாக எவ்வளவு சிறுநீரை நீங்கள் சிந்தினீர்களென்பதை அறிந்துகொள்ள இந்தச் சோதனை உதவுகிறது. இந்தச் சோதனையைச் செய்து நிறையை அறிந்துகொள்ள உங்களிடம் சரியான தராசு ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் இச் சோதனையை பின்வருமாறு செய்யுங்கள்:
ஒவ்வொரு கிராமும் ஒரு மி.லீ. சமமானபடியால், எவ்வளவினை நீங்கள் சிந்தினீர்களென்பதை இது காட்டும். இது போன்றது:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
What will happen during the check up?During the check up, you will be asked about your diet and your weight. You will also be asked about your past health and your health now. You may be asked:
Questions for women only:
|
மருத்துவ பரிசோதனையின்போது என்ன நடக்கும்?மருத்துவப் பரிசோதனையின்போது, உங்களின் உணவு, உங்களின் நிறை, உங்களின் கடந்தகால உடல்நலம் மற்றும் இப்போதுள்ள உடல் நலம் பற்றி உங்களிடம் கேட்கப்படும். உங்களிடம் கேட்கப்படலாம்:
பெண்களுக்கு மாத்திரமான கேள்விகள்:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Some of the tests that could be used for your bladder control check up include:
|
உங்களது சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டுச் சரிபார்த்தலுக்குப் பயன்படுத்தப்படும் சில பரிசோதனைகளில் அடங்குபவையாவன:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Remember No matter what type of test you are asked to have done, you can ask:
|
நினைவில் இருக்கவேண்டியவை நீங்கள் என்ன சோதனை செய்ய உள்ளீர்கள் என்பது காரியமில்லை, நீங்கள் கேட்கலாம்:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seek helpYou are not alone. Poor bladder and bowel control can be cured or better managed with the right treatment. If you do nothing, it might get worse. Phone expert advisors on the National Continence Helpline for free:
1800 33 00 66 * (8am - 8pm Monday to Friday AEST) To arrange for an interpreter through the Telephone Interpreter Service (TIS), phone 13 14 50 Monday to Friday and ask for the National Continence Helpline. Information in other languages is also available from continence.org.au/other-languages For more information:
* Calls from mobiles are charged at applicable rates. |
உதவியை நாடவும்நீங்கள் தனியானவர் அல்ல. சரியான சிகிச்சையால் சிறுநீர்ப்பைக் குறைபாடு மற்றும் மலக்குடல் கட்டுப்பாட்டினைக் குணப்படுத்தலாம் அல்லது சிறப்பாக நிர்வகிக்கலாம். நீங்கள் ஒன்றுமே செய்யாதுவிட்டால், நிலைமை மோசமாகலாம். இலவச:
நிபுணத்துவ ஆலோசகர்களை National Continence Helpline 1800 33 00 66 * இல் தொலைபேசியில் அழையுங்கள். (மு.ப 8 - பி.ப 8 திங்கள் முதல் வெள்ளி வரை AEST) திங்கள் முதல் வெள்ளி வரை தொலைபேசி உரைபெயர்ப்பு சேவை (TIS) ஊடாக ஒரு உரைபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்வதற்கு 13 14 50 இல் National Continence Helpline ஐக் கேட்கவும். continence.org.au/other-languages இலிருந்து தகவல்கள் ஏனைய மொழிகளிலும் கிடைக்கும் கூடுதல் தகவல்களுக்கு:
* கைப்பேசியிலிருந்து அழைப்புக்களை மேற்கொள்ள அதற்கான கட்டணங்கள் அறவிடப்படும். |
Bladder Control Check Up in Tamil
சிறுநீர்ப்பைக் கட்டுபாட்டைச் சரிபார்த்தல்
Browse and download our factsheets in Tamil
Last Updated: Fri 30, Jul 2021
Last Reviewed: Tue 17, Mar 2020