For some people, it is necessary to use continence products such as pads, pants, catheters, urine drainage bags or bedding protection products to manage their condition. For some people, the continence products may be needed long term. Consequently, the cost of these products becomes very expensive, putting unreasonable pressure on the household budget. |
உடல் நிலையைப் சரிவரப் பேணுவதற்கு, மாதவிடாய் துவாய்கள், நீளக்கால்சட்டைகள், சிறு நீரை பிடித்துவெளியேற்றும் பைகள் அல்லது படுக்கையை பாதுகாக்கும் பொருட்கள் போன்றவற்றை சிலர் பாவிக்க வேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு மேற்படி சுகாதாரப் பொருக்கள் நீண்டகாலத்திற்கு தேவைப்படுகிறது. இப்பொருட்களுக்கான விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதனால் வீட்டு வரவு செலவு திட்டத்திலே மேலதிகமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. |
A continence clinic or the National Continence Helpline can provide you with contact details for suppliers of continence products. They can also provide you with information about your eligibility for funding schemes, which may assist with the ongoing costs of purchasing and replacing continence products. |
தூய்மைபேணும் பொருட்களை விநியோகம் செய்பவர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டிய விபரங்களை தூய்மை பேணும் மருந்தகம் அல்லது“நாஷனல் கான்டினன்ஸ் ஹெல்ப்லைன்” இடமிருந்து பெறலாம். இப்பொழுது இருக்கும் செலவுகளுக்கு மேலதிகமாகமேற்படி தூய்மை பேணும் பொருட்களை மாற்றுவதற்கு அல்லது புதிதாக கொள்வனவு செய்வதற்கான செலவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதிவாய்ந்தவரா என்பதனை அறிவதற்கான தகவல்களை வழங்குவார்கள். |
Note: An assessment by a continence nurse advisor is recommended to ensure that you or the person you are caring for uses the most appropriate continence product, including the correct fit and application of the product. |
குறிப்பு: நீங்கள் அல்லது நீங்கள் பராமரிக்கும் ஒருவர் சாதனத்தின் பயன்பாடுகள் உட்பட பொருத்தமான உகந்த சௌக்கிய சாதனத்தை உபயோகிப்பதனை ஒரு சௌக்கிய சாதனங்களுக்கான மதிப்பீடு செய்யும் ஒரு மருத்துவமாது ஆலோசகரின் சிபார்சின் அடிப்படையில் உறுதிசெய்யப்படுகிறது. |
There are various funding schemes available for continence products funded by the Australian Government. These schemes have differing eligibility criteria and funding allocations, and it is important to note is that you may be eligible to apply for government funding through several schemes. Australian Government funding schemes are open to all Australian citizens who meet the eligibility criteria, regardless of which state of Australia they live in. |
சுகவாழ்வுக்கான சாதனங்களைப் பெற்றுக்கொள்ள ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்ட பல்வேறுபட்ட உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் உள்ளன. இத்திட்டம், உதவித்தொகை பெறுவதற்கான தகைமையை அறிந்துகொள்ள பல்வேறுபட்ட தராதரங்களையும் பண பங்கீட்டையும் கொண்டுள்ளது அத்துடன் பல்வேறுபட்ட திட்டங்களூடாக அரசிடமிருந்து உதவித்தொகை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகைமைபெற்றவராயிருகலாம் என்பதனை கவனித்துக்கொள்வது முக்கியமாகும்.ஆஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் என்பதனைப் பொருட்படுத்தாமல் தகுதி வாய்ந்த எல்லா ஆஸ்திரேலியர்களும் ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகைவழங்கும் திட்டம் ஏற்புடைத்தாகும். |
There is also a range of state/territory government funding schemes available. For more information please contact the National Continence Helpline 1800 33 00 66. If you have any English language difficulties you can contact the Helpline by using the telephone interpreter service. Call 13 14 50. At first, a person will answer the call in English, name the language you speak and wait on the phone. You will be connected to an interpreter who speaks your language, then tell them you want to call the National Continence Helpline on 1800 33 00 66. Wait on the phone to be connected and the interpreter will assist you to speak with a continence nurse advisor. Telephone interpreter services are provided free of charge to you. |
பல்வேறுபட்ட மாநில/பிரதேச அரசாங்கங்க பண உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு தயவு செய்து 1800 33 00 66ல் தேசிய மருத்துவப் பொருட்கள் உதவித்தொடர்பை (ஹெல்ப் லைன்) அழைக்கவும். ஆங்கில மொழி புரியாதுவிட்டால் தொலைபேசி மொழிஉரைப்பவர் சேவையைப் பாவித்து உதவித்தொடர்புடன் (ஹெல்ப் லைன்) பேசலாம். அழையுங்கள் 13 14 50. முதலில் ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார், நீங்கள் பேசும் மொழி என்ன என்பதனைச்சொல்லிவிட்டு சற்று தொலைபேசியில் தாமதிக்கவும். உங்களின் பாஷையைப் பேசும் ஒரு மொழிபெயர்த்துரைப்பவர் உங்களுடன் தொடர்புகொள்வார். பின்னர், தேசிய சுகவாழ்வுப் பொருட்கள் உதவித்தொடர்புடன் (ஹெல்ப் லைன்) 1800 33 00 66 இல் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறுங்கள். தொடர்புகளை மேற்கொள்வதற்காக தொலைபேசியில் காத்திருங்கள், நீங்கள் கழிவுகட்டுப்படுத்தும் பொருட்களுக்கான ஒரு தாதி ஆலோசகருடன் பேசுவதற்கு மொழிபெயர்த்துரைப்பவர் உதவுவார். தொலைபேசி மொழிபெயர்த்துரைக்கும் சேவை இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது. |